வேலைக்கு போகாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்த கணவன் ஒருவன் குடும்ப
சண்டையில் மனைவியின் மூக்கைக் கடித்து காயப்படுத்தியிருக்கிறான்.
பர்ஸ்சில் இருந்து பணத்தை எடுத்தியா என்று கேள்வி கேட்டதற்காக மனைவியின்
மூக்கை காயப்படுத்தி 15 தையல் போட வைத்திருக்கிறான். குஜராத் மாநிலம்
அகமதாபாத் நகரின் கோடாசார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளனது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா குல்வானி. 40 வயதாகும்
ரேஷ்மாவின் கணவர் பெயர் கைலாஷ் குமார்.வேலையில்லாத வெட்டி ஆபிசர். ரேஷ்மா
கைலாஷ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். பாவேஷ் கல்லூரியில் படிக்கிறார்.
பாவனா டியூசன் சென்டரில் வேலை செய்கிறார். தீபக் 12ஆம் வகுப்பு
படிக்கிறார்.
வீட்டு வேலையும் செய்து கொண்டு, படிக்கும் பிள்ளைகளுக்கு அனைத்து
வேலைகளை செய்து விட்டு வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி
வந்தார்.
சம்பளப்பணத்தில் செலவு செய்தது போக அவசிய தேவைக்காக ரூ. 3000
பர்சில் வைத்திருந்தார். செவ்வாய்கிழமை பர்ஸை பார்த்த ரேஷ்மாவிற்கு
அதிர்ச்சி காத்திருந்தது. பர்சில் இருந்த பணத்தை காணவில்லை.
யார்
எடுத்திருப்பார்கள் என்ற யோசனையில் பிள்ளைகளிடம் கேட்டார். அவர்களும்
பணத்தை பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.
தனது கணவன் கைலாஷ்குமாரிடம் 3000 பணத்தை எடுத்தியா என்று கேட்டார். அதற்கு
முதலில் மறுத்த அவன், பின்னர் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக
கூறினான்.
அதற்கு கணவனை திட்டி சண்டை போட்டார் ரேஷ்மா. கைலாஷ் குமாரின்
கோபம் அதிகரித்தது. மாறி மாறி சண்டை போட்டு திட்டிக்கொண்டனர்.
ஆத்திரமடைந்த கைலாஷ் குமார் ரேஷ்மாவின் தலைமுடியை பிடித்து தரதரவென
இழுத்துச்சென்று கீழே வீசினார்.
முகத்தின் அருகே வாயை கொண்டு போய் மூக்கை
கடித்து துப்பினார். இதில் ரேஷ்மா அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்
பக்கத்தினர் ஓடி வந்து ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரேஷ்மா அளித்த புகாரின் பேரில் கைலாஷ் குமார் மீது எப்ஐஆர் பதிவு
செய்துள்ளனர். படுகாயமடைந்த ரேஷ்மாவின் மூக்கின் மேல் 15 தையல்
போடப்பட்டுள்ளது. ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெட்டியாக ஊரைச்சுற்றிய கணவன், பர்ஸில் இருந்து பணத்தை எடுத்ததோடு
கேள்வி கேட்ட மனைவியை படுகாயப்படுத்திய சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment