வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தனுஷ்கோடி கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கியது ஆபத்தான அஞ்சாலை மீன் | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, July 02, 2019

தனுஷ்கோடி கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கியது ஆபத்தான அஞ்சாலை மீன் | Run World Media

* கடித்தால் ‘லெக் பீஸ்’ காலி

தனுஷ்கோடி கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய அஞ்சாலை மீனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். கடலில் வாழும் மீன்கள் உணவுக்காக பயன்படுகிறது. சில மீன்கள் விஷம் பொருந்தியதாகவும் உள்ளன. 

ஆபத்தை ஏற்படுத்தும் மீன்களில் ஒன்றுதான் அஞ்சாலை. மீனின் தலைப்பாகமும், உடலும் பாம்பு போன்று இருக்கும். அஞ்சாலை மீன்கள் கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, மீனவர்களுக்கும் ஆபத்தாது. 





அஞ்சாலை வகை மீன்களின் வாய் பெரிதாகவும், பற்கள் கூர்மையானதாகவும் இருப்பதால், இது கடித்தால் வாய்க்குள் சிக்கும் சதைப்பகுதி முழுவதையும் தனியாக எடுத்து விடும்.






தப்பித்தவறி மீனவர்கள் இதனிடம் சிக்கி கை, கால்களில் கடித்தால் எலும்பைத்தவிர சதைப்பகுதி முழுவதும் தனியாக இதன் வாய்க்குள் போய் விடும். ஆபத்து நிறைந்த அஞ்சாலை மீன்கள் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வலையில் தப்பித்தவறி சிக்கி விட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இதனை வலையில் இருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள்.





குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் வாழும் அஞ்சாலை மீன்கள் சில நேரங்களில் கடல் அலையுடன் சேர்ந்து கரை ஒதுங்குவதும் உண்டு. நேற்று காலை தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் உயிருடன் ஒரு அஞ்சாலை மீன் கரை ஒதுங்கியது. 3 அடி நீளம் கொண்ட அஞ்சாலை மீன் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரித்தனர். பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் கரை ஒதுங்கிய அஞ்சாலை மீனை பார்த்து ஆர்வத்துடன் மொபைலில் படம் எடுத்து சென்றனர்.




No comments:

Post a Comment