வேலூர் கலெக்டர் ஆபீசில் வேட்பாளர் ஒருவர் பின்னோக்கிய நடந்து வந்ததை
பார்த்ததும் அனைவருக்கும் அள்ளு கிளம்பி விட்டது. அத்துடன் அவருக்கு வயது
இரண்டு லட்சம் என்றதும் எல்லாரும் அலறி அடித்து கொண்டு ஓடியே விட்டனர்!
வேலூரில் 5-ம் தேதி தேர்தல் நடக்க போகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கலும்
நடந்து முடிந்துவிட்டது. முக்கிய பிரமுகர்கள் முதல் சுயேச்சைகள் வரை வேட்பு
மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் என்பது மிக மிக முக்கியமான, சீரியஸான ஒரு விஷயம். ஆனால்
இந்த இடத்தில்கூட நம்ம ஆட்களின் அலும்பல் தாங்க முடியவில்லை.
வித்தியாசம்
வேட்புமனுக்கள் கலெக்டர் ஆபீசில் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது ஒருத்தர் 2
கைகளையும் விரித்துக்கொண்டு பின்னோக்கியே வேகவேகமாக நடந்துவந்தார். அவரது
டிரஸ்ஸை பார்க்கவும் வித்தியாசமாக இருந்து. சினிமாவில் ஆவிகள் அணிவது போல
அந்த டிரஸ் தெரிந்தது.
என் பேரு மனிதன்
இவர் இப்படி வரும் ஸ்டைலை பார்த்ததுமே மிரண்டு போன போலீசார் ஓடிப்போய்
தடுத்து நிறுத்தி யார் என்ன என்று விசபாரித்தனர். அதற்கு அவர், "என் பேர்
மனிதன். வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அக்ராகரம் கிராமத்தை சேர்ந்தவன். 38
வருஷமா நான் இப்படித்தான் பின்னோக்கிதான் நடக்கிறேன்.
கல்யாணம் ஆகலை
உலக அமைதிக்காக 16 வருஷமாக யார்கூடவும் பேசாமல் இருந்தேன். பிரதமர்
பதவிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில்தான் நான்
திரும்பவும் பேசவே ஆரம்பித்தேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
ஜெயிப்பேன்
ஆனால் எனக்கு வயசு 2 லட்சத்து 16 ஆயிரத்து 668 (2,16,668)ஆகிறது . நான்
எப்போ பிரதமர் ஆவேனோ, அப்போதான் நேரா, அதாவது முன்னோக்கி நடப்பேன்.
இப்போதைக்கு வேலூர் தொகுதியில் போட்டியிட போகிறேன். எப்படியும் இங்கே
நான்தான் ஜெயிக்க போகிறேன்" என்றார்.
No comments:
Post a Comment