இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்த டிக்டாக் செயலியை அதிகளவு
பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், இந்த செயலி மூலம் நாட்டில்
பல்வேறு புதிய பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.
முனனர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த செயலி, தற்போது தடை நீக்கம் காரணமாக மீண்டும் தலை தூக்கியுள்ளது.
முனனர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த செயலி, தற்போது தடை நீக்கம் காரணமாக மீண்டும் தலை தூக்கியுள்ளது.
ஐபோன் எக்ஸ்எஸ்
அதன்படி டிக்டாக் மோகம் காரணமாக புதுடெல்லியில் 20-வயது இளைஞர் ஒருவர்
தற்போது சிறையில் தள்ளப்பட்டிருக்கறார்.
கடந்த புதன்கிழமை சப்ரா என்பவர்
காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார், அது என்னவென்றால் நான் எனது
ஐபோன் எக்ஸ்எஸ் போனை விற்பனைக்காக ஒ.எல்.எக்ஸ் இணையத்தில் பதிவேற்றி
இருந்தேன்.
ஜதின் நாகர்
இதை பார்த்துவிட்டு ஜதின் நாகர் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு ஐபோனை வாங்க
விருப்பம் தெரிவித்தார், விலை ரூ.80,000 என முடிவு செய்துகொண்டோம்.
பின்பு மாலை 6மணி அளவில் போனை கொடுக்க நாங்கள் ப்ரீத் விஹார் சிக்னல்
அருகே சந்தித்துக்கொண்டோம். அப்போது எதிர்பாராத நேரத்தில் எனது போனை
எடுத்துச் சென்றுவிட்டார் எனக் கூறி புகார் அளித்தார்.
போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்
அதன்பின்பு போலீஸார் கடந்த சனிக்கிழமை ஜதின் நாகர்-ஐ கைது செய்து அவரிடம்
இருந்த போனை கைப்பற்றினர், பின்பு விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால்,
பொதுவாக போனை திருடுபவர்கள் அடுத்த நிமிடமே விற்று விடுவார்கள் அல்ல போனை
அனைத்து விடுவார்கள்.
ஆனால் இதை செயயாமல் அவர் வைத்திருந்ததற்கான காரணத்தை
கேட்டு
போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம்
உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரை சேர்ந்த ஜதின் நாகர் டிக்டாக்
செயலியில் வீடியோக்களை ஏற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார், ஆனால்
தன்னிடம் நல்ல போன் இல்லாத காரணத்தால் தரமான வீடியோக்களை பண்ண முடியாமல்
இருந்திருக்கிறார்.
எந்த கிரிமினல் வழக்கும் இல்லை
ஐபோன் இருந்தால் அதன் வீடியோ மிக அருமையாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று
கருதி அவரிடம் போனை திருடியிருக்கிறார்.
மேலும் இவர் ஒரு தனியார் உணவு
நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், குறிப்பாக கைது
செய்யப்பட்டுள்ள இவர் மீது இதுவரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதே
உண்மை.
No comments:
Post a Comment