ஏன் ஹெல்மட் போடல.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்
திருப்பூர்: "ஹலோ போலீஸ்கார்.. ஏன் ஹெல்மட் போடல.. ஏன் உங்க பைக்கில்
நம்பர் பிளேட் இல்லை" என்று இளைஞர் ஒரு கேள்வி கேட்டு.. ஓட ஓட விரட்டி
உள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர், ரெண்டு நாளைக்கு முன்னாடி,
திருப்பூர் - பல்லடம் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு போலீஸ்காரர் பைக்கில் நின்று கொண்டிருந்தார்.
அவருடன் வேறு
போலீஸ் ஜீப்போ, காவலர்களோ இல்லை. தன்னந்தனியாக நின்றிருந்த அவர், கணேஷை
வழிமறித்து, வண்டியை ஓரங்கட்ட சொன்னார். பிறகு கணேஷிடம், ஏன் போன் பேசிக்
கொண்டே வண்டியை ஓட்டுறே என்று சொல்லி.. விஷயத்துக்கு அடிபோட்டார்.
தவறு செய்யவில்லை
ஆனால் கணேஷோ, நான் போனே பேசவில்லையே என்று சொல்லி அந்த போலீஸ்காரருடன்
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு தன் நண்பர் சரவணன் என்பவரை
கணேஷ் வரவழைத்தார். இருவரும் சேர்ந்து போலீஸ்காரரிடம் தவறு செய்யவில்லை
என்று திரும்ப திரும்ப சொன்னார்கள்.
சரமாரி கேள்வி
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணேஷ், "என்னை விசாரிக்கிறீங்களே.. முதல்ல
உங்க பைக்கில நம்பர் பிளேட் இல்லையே.. நீங்க ஏன் ஹெல்மட் போடல.. என்று
எதிர்கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் போலீஸ்காரர்
விழித்தார்.
வீடியோ
இதுக்கு மேல போனா, நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக
பைக்கை எடுத்து பறந்தார். நடந்த சம்பவங்கள் அத்தனையும் கணேஷ், மொபைல்
போனில் வீடியோ எடுத்துவிட்டு, 'வாட்ஸ் ஆப்'பிலும் பரவ விட்டார்.
சஸ்பெண்ட்
இந்த வீடியோவை, மாவட்ட போலீசார் விசாரித்தனர். பிறகுதான் சம்பந்தப்பட்ட
போலீஸ்காரர், மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், சில
மாதங்களுக்கு முன், ஒழுங்கீன நடவடிக்கையாக, உடுமலை அருகே உள்ள குடிமங்கலம்
ஸ்டேஷனில் இருந்து, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இப்படி பொது இடத்தில் மீண்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ராதாகிருஷ்ணனை,
திருப்பூர், எஸ்பி., கயல்விழி நேற்று, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment