"நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ
எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.." என்று டிரைவர் ஒருவர்
சவால் விட, கடைசியில் அந்த சவாலே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பக்கம் பண்டார வடை என்ற ஊர் உள்ளது. இங்கு
செல்வதற்காக சென்னைவாசி ஒருவர் கும்பகோணம் பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுள்ளார்.
பண்டாரவடை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துள்ளார்.
ஸ்ரீ லஷ்மி பஸ் சர்வீஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பஸ் போல
தெரிகிறது. ஆனால் வழியில் உள்ள ஊரான பண்டாரவடை ஸ்டாப்பிங்கில் நிறுத்த
டிரைவரும், கண்டக்டரும் தயங்கி உள்ளனர்.
ஒரு பயணிக்காக மட்டும் பஸ்ஸை நிறுத்த அவர்களுக்கு இஷ்டம் இல்லை. இது
சம்பந்தமான வாக்குவாதத்தில் கண்டக்டர் அந்த பயணியுடன் ஈடுபட்டிருந்தார்.
அந்த சமயத்தில்தான் பயணி நடக்கும் வாக்குவாதத்தை தனது செல்போனில் வீடியோ
எடுக்க முற்பட்டார். அப்போதுதான் டிரைவர் உள்ளே வருகிறார். அங்கு நடக்கும்
உரையாடல்தான் இது:
டிரைவர்:
"எடுத்துக்க.. எடுத்துக்க.. நல்லா எடுத்துக்க.. என்னை எடு..
முதல்ல கீழே இறங்கு.. "
பயணி:
நான் ஏன் இறங்கணும்.. டிக்கெட் எடுத்திருக்கேன்
டிரைவர்: போகும்போது ஏறு..
பயணி: ஏன் இறங்க சொல்றீங்க.. இந்த வண்டிதானே முதல்ல போகுது.
அதான் ஏறி
உட்கார்ந்திருக்கேன். ரீசன் சொல்லுங்க. பஸ் காலியாதானே இருக்கு. எதுக்கு
என்னை இறங்க சொல்றீங்க?
டிரைவர்:
நீ டக்குன்னு உள்ளே ஏறி உட்கார்ந்துக்கலாமா?
பயணி:
என்ன ரூல்ஸ் இது? காசு தந்துதானே டிக்கெட் வாங்கி இருக்கேன்.
இந்த
பஸ் பண்டாரவடைக்குதானே போகுது?
டிரைவர்:
அதோ அந்த பஸ்கூட அங்கதான் நிறுத்துறாங்க
பயணி:
அது எங்களுக்கு தேவை இல்லை, எந்த பஸ் முதல்ல போகுதோ அதிலதான் ஏற
முடியும். உங்க பேர் என்ன?
டிரைவர்:
போட்டோ எடுத்துட்டே இல்லை.. பேர் தேவை இல்லை.
பயணி:
லஷ்மி டிராவல்ஸ்தானே?
டிரைவர்:
இதோ பார்த்துக்கோ (காக்கி யூனிபார்மில் பொறிக்கப்பட்ட பெயரை
வீடியோவில் காட்டுகிறார்) நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட்
ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்..
பயணி:
இன்னைக்கு பாரு நீ .. இது கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்.. இந்த டிரைவர்
இப்படி பேசிட்டு இருக்கார் பாருங்க".. என்று பொதுமக்களுக்கு சொல்கிறார்
இப்படி பயணி பேசியதுடன் இணையத்திலும் போட்டுவிட்டார்.
இந்த வீடியோ வைரலாகி,
கடைசியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், பஸ் கண்டக்டர், டிரைவர்
ரெண்டு பேரையுமே அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment