வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 15, 2019

விடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முழுவதும் சாலையில் படுத்துறங்கி போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

 கர்நாடகாவில் கடந்த நடைபெற்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் எடியூரப்பா அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

 ஆனால் குறைந்த இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சியும் மஜதவும் கூட்டணி சேர்ந்ததால் கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது.


பாஜக போராட்டம்
 இதையடுத்து அங்கு ஆட்சியில் உள்ள மஜத - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.


நிலம் விற்க எதிர்ப்பு
 கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டது. இதில் முறைகேடு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.


பெங்களூருவில் போராட்டம்
இதுதொடர்பாக பெங்களூருவில் இரவு - பகல் என போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூருவில் பாஜகவினர் நேற்று போராட்டத்தை தொடங்கினர்.


சாலையில் படுத்து தூங்கிய எடியூரப்பா
இதற்காக சாலையில் அமைக்கப்பட்ட பந்தலில் பகல் நேரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பந்தலிலேயே எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். 

No comments:

Post a Comment