வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஷாக் ! இளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 22, 2019

ஷாக் ! இளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்..

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரிடையே மண்டை ஓட்டின் பின்புறத்தில் எலும்பு கொம்பு முளைப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

 மொபைல் தொழில்நுட்பம் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளது - நாம் எவ்வாறு படிக்கிறோம், வேலை செய்கிறோம், தொடர்புகொள்கிறோம், ஷாப்பிங் செய்கிறோம் என்பது வரை மாற்றிவிட்டது.
 இதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான். நாம் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நமக்கு முன்னால் உள்ள இந்த சிறிய இயந்திரம் (செல்போன்) நம் மண்டை எலும்புக்கூடுகளை மறுசீரமைப்பு செய்கின்றன. இது நமது நடத்தைகளை மட்டுமல்ல, நம் உடலையும் மாற்றக்கூடும்.


எலும்பால் உருவாகும் கொம்பு 
 பயோமெக்கானிக்ஸில் புதிய ஆராய்ச்சி, இளைஞர்களின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் கொம்பு போன்ற கூர்முனைகள் எலும்புகளால் உருவாகி வருவதாகக் கூறுகிறது.

 தலை முன்னோக்கி சாய்வதால் ஏற்படும் எலும்புத் தூண்டுதல்கள், முதுகெலும்பிலிருந்து தலையின் பின்புறத்தில் உள்ள தசைகளுக்கு எடையை மாற்றி, இதுபோன்ற எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மனித வடிவத்தையே மாற்றும் செல்போன்கள் 
 இதன் விளைவாக ஒரு கொக்கி அல்லது கொம்பு போன்ற அம்சம் மண்டையிலிருந்து வெளியேறி, கழுத்துக்கு மேலே உருவாகி உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வெளியிட்ட ஆய்வறிக்கையில், இளைஞர்களின் எலும்பு வளர்ச்சியின் பரவலானது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மாறுகிறது என்று கூறுகிறது.
 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கையடக்க சாதனங்கள், மனித வடிவத்தையே சிதைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

5 மிமீ நீளம் கொம்பு 
 இந்த கண்டுபிடிப்பில், வியக்க வைக்கும் ஒரு பகுதி, எலும்பு கொம்பின் அளவு பற்றியது. அவை 3 அல்லது 5 மில்லிமீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளதை எக்ஸ்ரே ரிப்போர்ட் காட்டுகிறது. 

மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இந்த எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது உலகம் சந்திக்கும் அபாயத்தின் ஒரு துளி என்பதை எடுத்துக் காட்டுகிறது. 


வருடங்கள் ஆகும்
 "இந்த கொம்பு வடிவங்கள் உருவாக நீண்ட காலம் எடுத்திருக்கலாம். இதன் பொருள், அவர்கள் சிறுவயதிலிருந்தே அந்த தலை பகுதியை செல்போன் பார்க்க அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்" என்று ஆய்வாளர் ஷாஹர் விளக்கியுள்ளார்.

இன்னும் ஆய்வு தேவை 
 அதேநேரம், யேல் பல்கலைக்கழகத்தின் உடலியல், மரபியல் மற்றும் நரம்பியல் அறிவியல் பேராசிரியரான மைக்கேல் நிதாபாச் இந்த கண்டுபிடிப்புகளால் நம்பப்பவில்லை. 

"எக்ஸ்-ரே கதிர்களால், தலை பகுப்பாய்வு செய்யப்பட்ட எந்தவொரு நபரின் செல்போன் பயன்பாட்டைப் பற்றி முழுமையாக, அறியாமல், செல்போன் பயன்பாடு மற்றும் மண்டை ஓடு உருவவியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து முடிவுகளை எடுக்க முடியாது," என்று அவர் கூறினார். 

ஆனாலும், இவரும்கூட, கொம்பு முளைக்க வேறு என்ன காரணம் என அறுதியிட்டு சொல்லவில்லை. ஆனால் சன்ஷைன் பல்கலைக்கழக ஆய்வாளர்களோ, இது செல்போன் பயன்படுத்தியதால் உருவான கொம்புகள் என அறிதியிட்டு கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment