மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரதகுர்ஹதே. இவர் தனது மகளின் திருமண செலவிற்காக தனது சொந்த நிலத்தில் இருந்த
860 மரங்கவனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக தகவல் அறிந்த வனத்துறை
அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
இது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
இந்த
விசாரணையில் தஷரத், மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாததாலும், 40
ஆண்டுகளுக்கு பின் தஷரத் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதாலும்
இவ்வாறு செய்ததாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 860 மரங்களை வெட்டி காட்டை சேதப்படுத்தியதாக கூறி, வனத்துறை அதிகாரிகள் தஷரத்துக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.
அதன்படி,
தஷரத் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை விட இரு மடங்கு மரங்களை நட
வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் அதற்கான பணத்தை வனத்துறையிடம்
செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment