வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 77.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 03, 2019

77.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார்

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2019-2020-ம் கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் புத்தகங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது

. மாணவர்களது புத்தகச் சுமையினை குறைக்கும் நோக்கத்தோடு 2012-2013 கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் பருவம் ஜுன் மாதத்திலும், இரண்டாம் பருவம் அக்டோபர் மாதத்திலும், மூன்றாம் பருவம் ஜனவரி மாதத்திலும் தொடங்குகிறது. பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்க நாளன்றே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ffff
மாணவர்களின் முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்திடவும், செயல் வழிகற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவ, மாணவிகள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய பாடத் திட்டமும், பாட நூல்களும் உருவாக்கப்பட்டது.


2019-2020-ம் கல்வியாண்டிற்கு ரூ.195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தான் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

 பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், முழுமையாக பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்றே வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், மாற்றங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment