24 மணிநேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் ;ஒரு பணியாளரை 8
மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை
பார்க்க வைக்கக் கூடாது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்.. 24 மணி நேரமும் கடைகள்,
தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365
நாட்களும் திறந்திருக்கலாம்.அதே நேரத்தில் எந்தவொரு நாளிலும் ஒரு பணியாளரை 8
மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை
பார்க்க வைக்கக் கூடாது. அதுபோல ஓவர் டைம் பணியையும், ஒரு நாளுக்கு 10.30
மணி நேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற
வைக்கக் கூடாது.
பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அதற்கு எழுத்துப்பூர்வ
அனுமதியை அவர்களிடம் நிறுவனங்கள் பெற வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 6
மணி வரை பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.அடுத்த மூன்று
ஆண்டுகளுக்கு இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை
அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment