சர்வதேச அளவில் தற்போது செல்ஃபி கலாச்சாரம் பெருகி விட்டது. முக்கிய
பிரமுகர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது சர்வ
சாதாரணமாக மாறிவிட்டது.
ஜூன் 21-ந்தேதி சர்வதேச
செல்ஃபி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று செல்ஃபி தினம்
கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில தங்களின்
செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ந்தனர்.
இன்றைய
நிலை இப்படி இருக்க கடந்த 180 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி தோன்றி
இருப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் கார்னெலியஸ்
என்பவர் காமிராவில் தன்னை தானே போட்டோ (செல்ஃபி) எடுத்தார். வேதியியல்
நிபுணரும், புகைப்பட ஆர்வலருமான இவர் பிலாடெல்பியாவை சேர்ந்தவர்.
செல்ஃபி என்ற வார்த்தை 2002-ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹோப் என்பவர் தனது 21-வது பிறந்த தினத்தை
கொண்டாடினார்.
அப்போது குடி போதையில் தான்ஒருவரை முத்தமிட்டபடி எடுத்த
போட்டோவை வெளியிட்டார். அதுவே செல்ஃபி ஆனது. இந்த வார்த்தை 2013-ம் ஆண்டு
ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டது.
ஆனால் முதன் முறையாக சர்வதேச செல்ஃபி தினம் 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டது. டி.ஜே.ரிக் நிலி இதை தொடங்கிவைத்தார்.
No comments:
Post a Comment