[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் கிராமத்தில் பால் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அமைதியாக இருந்த போதிலும் போலீசார்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உண்டாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஆண்டு அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டபோதிலும் வாகனங்களை கீழே தள்ளி காற்றை பிடுங்கி விட்டு தேவையில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் வீடு திரும்பும் நினைக்கும் பொது மக்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடலாம் என ஏதாவது சட்டம் உள்ளதா..?
இந்த ஆண்டு பின்புறமாக தனியாக நிற்கும் பொதுமக்களையும் தேவையில்லாமல் அடித்து துரத்துவது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
முறையாக ஞாயத்தை கேட்டாலும் "இன்னைக்கு அடங்க மாட்ட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தானே வந்து நிற்கனும், அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு" என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
இந்த திருவிழாவானது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய பிரசித்திபெற்ற திருவிழா என்பதால் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் வருகை தருகின்றனர். அப்படி மக்கள் வரும்பட்சத்தில் முன்கூட்டியே வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் ஏதாவது வழி செய்திருக்க வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் கூடிய பிறகு வேண்டுமென்றே வந்து வண்டியை தள்ளுமாரும், ஓரமாக நிற்குமாறு கூறி அராஜகத்தில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பின்புறத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றனரே தவிர முன் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
கடந்த பங்குனி உத்திரம் திருவிழா அன்று போலீசார் இல்லாத காரணத்தினால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமுகமாக திருவிழா நடந்தது.
அதனை கூறியதற்கு இந்த ஊர் காவல் படை காவலர் கேள்வி எழுப்பியவரையும், கடவுளையும் எவ்வளவு பச்சையாக பேசுகிறார் என்ற வீடியோவை நீங்களே கேளுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்
காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...
No comments:
Post a Comment