வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.

உலகின் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் 6 வைரஸ்கள் நிறைந்த சாம்சங் லேப்டாப் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக சர்வதேச அளவில் சுமார் 100பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த லேப்டாப் மூலம் சேதாரம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் xp மென்பொருளின் கீழ் இயங்கும் இந்த லேப்டாப் தான் உலகின் அபாயகரமான லேப்டாப் என்று கூறப்படுகிறது. பின்பு இது வெறும் லேப்டாப் மட்டுமல்ல அபாயகரமான இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சாம்சங் 
 வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்டு, விண்டோஸ் Xp அமைப்பில் செயல்படும் இந்த சாம்சங் லேப்டாப்பில் உலகின் மிக அபாயகரமான 6 வைரஸ்கள் உள்ளன. இந்த 6 வைரஸ்கள் இதுவரை 7லட்சம் கோடி வரையிலான சேதத்தை உலகில் ஏற்படுத்தியுள்ளது.

க்யோ ஒ டாங் 
பின்பு இதனை உருவாக்கியவர் க்யோ ஒ டாங் என்பவர் ஆவார், சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.

1.2மில்லியன்
 10.5-இன்ச் கொண்ட லேப்டாப் தற்சமயம் ஏலம் விடப்பட்டுள்ளது, இதற்கான துவக்க விலையே 1.2மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த லேப்டாப் ஏலம் விடப்படும் செய்தி வைரலானது, இந்த ஏலம் நிகழ்வு லைவ் ஆகக் ஒளிபரப்பப்படும் அளவுக்கு வரவேற்புப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது 
 இதில் உள்ள அபாயகரமான வைரஸ்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்த லேப்டாப் தற்போது காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது, பின்பு The Persistence of Chaos என்ற இணையதளத்தில் இந்த சாம்சங் லேப்டாப்-க்கான ஏலம் நடைபெறுகிறது.


No comments:

Post a Comment