வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விஜய் யார் என்றே தெரியாமல் அவருடன் நடித்த நடிகை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 05, 2019

விஜய் யார் என்றே தெரியாமல் அவருடன் நடித்த நடிகை




விஜய் யார் என்பது தெரியாமல் அவருடன் நடித்துள்ளார் கத்ரீனா கைஃப்.பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், விஜய்யும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்தார்கள். இந்நிலையில் அனைடா ஷ்ராஃப் அட்ஜானியா நடத்தும் நிகழ்ச்சியில் கத்ரீனா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் அவர் விஜய் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி கத்ரீனா கூறியதாவது,


ஊட்டி 
கோக் விளம்பரத்திற்காக ஊட்டிக்கு சென்றிருந்தேன். ஷூட்டிங்கின்போது தரையில் அமர்ந்திருந்தோம். நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் முன்பு இரண்டு பாதங்கள் தெரிந்தது.


பிசி 
யாரோ நிற்கிறார்கள் என்று நான் நிமிர்ந்து பார்க்காமல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அப்பொழுதும் அந்த பாதங்களை பார்க்க முடிந்தது. யாரு இது என்று நிமிர்ந்து பார்த்தால் விளம்பரத்தில் என்னுடன் நடித்தவர்.


விஜய் 
அவர் பெயர் விஜய் என்பதும், அவர் தென்னந்திய சூப்பர் ஸ்டார் என்பதும் எனக்கு பின்னர் தான் தெரிய வந்தது. குட்பாய் சொல்வதற்காக வந்தவர் நான் போனில் பேசியதை பார்த்துவிட்டு நான் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார். ரொம்ப நல்ல மனிதர் என்கிறார் கத்ரீனா.


பந்தா 
விஜய் பெரிய ஸ்டாராக இருந்தாலும் பந்தா இல்லாமல் அனைவரிடமும் பழகுவார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதை தான் கத்ரீனா கைஃபும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment