வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாரிஸின் அழகை ஈஃபில் டவர் மூலம் அட்வெஞ்சராக ரசிக்கலாம் - எப்படி?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

பாரிஸின் அழகை ஈஃபில் டவர் மூலம் அட்வெஞ்சராக ரசிக்கலாம் - எப்படி?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் அழகினை ஈஃபில் டவர் மூலம் அட்வெஞ்சராக பயணிகள்பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் மிக அழகிய நகரங்களுள் ஒன்றாகும்.


 இங்கு அமைந்துள்ள ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்ற அதிசயமாகும். இந்த டவர் 10 ஆயிரம் டன் எடைக் கொண்டது. மேலும் 324 மீட்டர் உயரம் கொண்டது. கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இந்த டவர் திறக்கப்பட்டு தொடர்ந்து 41 வருடங்கள் உலகிலேயே மிக உயர்ந்த கோபுரமாக இருந்த பெருமையைக் கொண்டது.
இந்நிலையில் ஈஃபில் டவர் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், இந்த டவரின் மூலம் பாரிஸின் மொத்த அழகை  பொது மக்கள், சுற்றுலா பயணிகள் ரசிக்க சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.



ஈஃபில் டவரின் மேல் தளத்தில் இருந்து, 800 மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ அலுவலகம் வரை கம்பி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.


 இந்த கம்பியில் பொருத்தப்பட்டிருக்கும் பெல்ட்டில் அமர்ந்துக் கொண்டு கம்பி வழியே பறந்து சென்று, பாரிஸ் நகரின் அழகை மேலிருந்து பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசமாகும்.


இந்த வழியில் செல்பவர்களுக்கான தேர்வு சமூக வலைத்தளங்களில் நடைபெற உள்ளது என்பதும், வரும் ஜூன் 11ம் தேதி வரை இந்த வசதி தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment