ரிஷப் பண்ட் அதிக சிக்ஸர்கள் அடிப்பதில் சேவாக் சாதனை ஒன்றை முந்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அருமையாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் மட்டும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார் ரிஷப் பண்ட். டெல்லி அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மொத்தமாக தன் நான்கு வருட ஐபிஎல் ஆட்டங்களில் 88 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இவை அனைத்தும் டெல்லி அணிக்காக மட்டுமே அடித்துள்ளார் பண்ட். இதன் மூலம், டெல்லி அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பு சேவாக் டெல்லி அணிக்காக 85 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை முறியடித்துள்ளார் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ரன் குவிப்பதும், சில போட்டிகளில் சொற்ப ரங்களில் ஆட்டமிழப்பதுமாக இருந்து வந்தார். எனினும், 3 அரைசதங்கள் அடித்து 14 போட்டிகளில் 401 ரன்கள் குவித்துள்ளார் பண்ட், இதன் சராசரி 36.45 ஆகும்.
அதே சமயம், ரிஷப் பண்ட் அடித்த அரைசதங்கள் டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியிலும், 116 என்ற இலக்கை நோக்கி ஆடிய போது மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் மட்டுமே நிலைத்து நின்று ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
No comments:
Post a Comment