தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.
கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் படத்தில் கூட சிம்புவின் உடல் எடை குறித்து கிண்டல் செய்யப்பட்டது. ரசிகர்களும் இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
சிகிச்சை முடித்து இன்று நடக்கும் தனது தம்பி குறளரசன் திருமணத்திற்கு வந்துள்ளார் சிம்பு. அப்போது வெளியான இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள், உடல் எடை நன்றாக குறைந்து பழைய சிம்புவாக திரும்பியுள்ளார். சிம்பு என்ற பெயர் சில வருடங்களுக்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கியது.
படங்கள் நடிக்காமல் இருந்தார், இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவாகவே இருந்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் மாநாடு படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது, அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் உடல் எடை குறைத்து பழையபடி அவர் வந்துவிட்டார் என ரசிகர்கள் சந்தோஷமாக உள்ளனர்.37 நட்களில் 13 கிலோ குறைத்துள்ளாராம் சிம்பு.
No comments:
Post a Comment