இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு
பயன்படும் வகையில் தான் இருக்கிறது, குறிப்பாக தமிழகத்தில் உள்ள சில
பொறியாளர் தொடர்ந்து புதுப்புது சாதனங்களை மக்களுக்கு பயன்படும் வகையில்
உருவாக்கி கொண்டே தான் இருக்கின்றனர்.
அதன்படி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பொறியாளர் சுரேஷ் என்பவர் ஒரு
புதிய முயற்சியை செயல்படுத்தி சாதனைப் படைத்துள்ளார். ஓய்வு பெற்ற
பொறியாளர் சுரேஷை அனைவரும் சோலர் சுரேஷ் என்று அழைக்கின்றனர்.
ஏனென்றால்
அவரது வீடு முழுவதும் சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி தான் மினசாரத்தை பெற்று
வருகிறார்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளி புத்தகத்தில் படித்தது என்ன?
பின்பு சுரேஷ் கூறியது என்னவென்றால் 25ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்
சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினேன் அப்போது யாருக்கும் அதுதொடர்பாக
பெரிய விழிப்புணர்வு இல்லை என்றும் பள்ளிப் புத்தகத்தில் படித்தது போல,
கூழாங்கல், நிலக்கரி, மணல் கொண்டு தண்ணீரைச் சுத்திகரித்து
பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.
நீரை பிரித்தெடுக்கும் கருவி
குறிப்பாக மழைநீரை கிணற்றில் சேகரிக்கிறேன், இதனால் இன்று வரையிலும் எனது
வீட்டில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று அவர் கூறனார்.
பின்பு
அவர் ஆச்சர்யப்படும்படி ஒன்று கூறினார், அது என்னவென்றால் என்னிடம்
போர்வெல்,கிணற்றில் தண்ணீர் உள்ளது, அத்துடன் காற்றிலிருந்து நீரை
பிரித்தெடுக்கும் கருவியை செய்துள்ளேன்,அதிலும் தண்ணீர் இருக்கிறது என்று
அவர் கூறினார்.
அசத்தலான மின்சாரம் உற்பத்தி
பொறுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறேன், அதன்மூலம் தற்போது 3கிலோ வாட் மின்சாரம் தயாரித்து வைத்துள்ளேன்.
பொறுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறேன், அதன்மூலம் தற்போது 3கிலோ வாட் மின்சாரம் தயாரித்து வைத்துள்ளேன்.
அதில் இரண்டு ஏசிகள்,வாஷிங் மிஷன், மிக்ஸி மோட்டார்
பம்ப், மின் விசிறி, டிவி, மின் விளக்குகள், கம்ப்யூட்டர் என வீட்டில் உள்ள
அனைத்து பொருட்களை பயன்படுத்துகின்றேன் என்றார்.
மாதம் செலவு என்ன தெரியுமா?
இந்த சோலார் உபயோகிப்பதால் 8வருடங்களாக எங்கள் வீட்டில் தண்ணீர் மற்றும்
மின்சாரத்திற்கு தட்டுபாடு இல்லை, இதற்கு 2மாதத்திற்கு ரூ.500தான்
செலவாகிறது என்று ரமேஷ் கூறினார்.
Read more at: https://tamil.gizbot.com/social-media/chennai-engineer-created-a-super-machine-that-can-create-drinking-water-from-air/articlecontent-pf157740-022006.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include
Read more at: https://tamil.gizbot.com/social-media/chennai-engineer-created-a-super-machine-that-can-create-drinking-water-from-air/articlecontent-pf157740-022006.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include
No comments:
Post a Comment