வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் கருவூலத்துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய ரூபாய்களை அந்நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது.



அதன்படி எந்த நாட்டு ரூபாய்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டைச் சேர்ந்த ரூபாய்கள் மட்டுமே இந்த வரிசை பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும்.
அந்த ரூபாயின் சர்வதேச மதிப்பு மற்றும் தாக்கத்தை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும்.


 அந்த வகையில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பணம் அமெரிக்காவின் இந்த பட்டியலில்  உள்ளது. இந்திய ரூபாயும் இந்தப் பட்டியலில் இருந்து வந்தது.

ஆனால், அமெரிக்காவின் சில முக்கிய கவலைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைந்து இருப்பதையடுத்து, நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட்டு இருப்பதாக, அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், சுவிட்சர்லாந்தும் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளை நாணய கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment