வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள தீவிரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதில் அரசுக்கு இல்லை.. குமுறும் மக்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள தீவிரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதில் அரசுக்கு இல்லை.. குமுறும் மக்கள்

லஞ்சம் பெறும் ஒரே நோக்கத்திற்காக தான் எட்டு வழிச்சாலை அமைக்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 விவசாயிகள் தாமாகவே நிலங்களை அளிக்க முன்வந்திருப்பதால், எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேறிய தீரும் என்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராம மக்கள், பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஆவேசமாக பேசிய மக்கள், எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றனர். இத்திட்டத்தினால் வளர்ச்சி வரும் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் செயல். நிச்சயம் இது மக்களை அழிவு நிலைக்கு தள்ளக்கூடிய திட்டம் தான் என குமுறினர்.

 தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் 500-க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆயிரக்கணக்கான கிணறுகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் அழிந்துவிடும்.

ஏராளமான விளைநிலங்களும் இத்திட்டத்திற்கு இரையாகிவிடும் என வேதனை தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் தெளிவாக கூறிய பின்னரும் எட்டு வழிச்சாலை அமைத்தே தீருவோம் என அரசு கூறுவதில் உள்நோக்கம் உள்ளது.




விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என ஒருபக்கம் கூறும் தமிழக அரசு, விளைநிலங்களை அமைத்து எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது முரணாக தெரியவில்லையா என விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

 தமிழகமே குடிநீரின்றி அல்லாடி வரும் நிலையில், அப்பிரச்சனையை தீர்க்காமல் இத்திட்டத்திலேயே குறியாக இருப்பதற்கு கமிஷன் வரும் என்பதே காரணம் என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். 

தமிழக அரசு இத்திட்டத்தை கைவிடாவிட்டால், பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/salem/the-intersection-of-8-way-road-construction-government-does-not-have-to-solve-the-problem-of-drink-352335.html

No comments:

Post a Comment