அகமதாபாத் போடக்தேவ் பகுதியில், ஐ வெனுஸ் மொபைல் ஸ்டோர் செயல்பட்டு
வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இரவு நேரத்தில் நுழைந்த
கொள்ளயைர்கள்
35 ஐபோன்கள், செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களின் முகம் பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
கொள்ளையில் 7 பேர்:
மொபைல் ஸ்டோரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் இந்த கொள்ளை
சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என தெரியவந்துள்ளது.
குறுகிய சந்து வழியே
நுழைந்த அவர்கள் கொள்ளையை வெற்றிகரமாக அரங்கேற்றியதும். ஸ்டோரில் இருந்த
லாக்கரை உடைத்து பொருட்களை கொள்ளையடிப்பதும் தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் துணிகர கொள்ளை:
கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஹிதேஷ் மற்றும் ரூன்கா மொபைல் ஸ்டோரை
பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
அவர்கள் ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கடையை
திறக்கும் போது, கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சிசிடிவி கேமரா காட்சி:
இதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த 7 கொள்ளையர்களும் சேர்ந்து
ஸ்டோருக்கு நுழைந்ததும்.
அங்கு இருந்த லாக்கரை உடைத்தும், 35 ஐபோன்களையும்,
ரூ.1.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
தற்போது, திருடர்களிடம் இருந்து 8 ஐபோன்கள் மட்டும் எஞ்சியுள்ளது.
3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு:
கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வஸ்தாரபூர் போலீஸ் நிலைய எஸ்ஐ எம்ஏ
ஜடேஜா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்திய தண்டனை சட்டம்
454, 457, 380 பிரிவுகளில் வழக்கு விசாரணை நடந்து வருகின்றது. விரைவில்
கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்று எஸ்ஐ ஜடேஜா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment