வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக காவல் துறை - ஆர்பரிக்கும் பொதுமக்கள் : இனி உங்கள் வீடுகளை 24 மணி நேரமும் நேரடியாகவே கண்காணிக்கும் போலீஸ்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 05, 2019

அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக காவல் துறை - ஆர்பரிக்கும் பொதுமக்கள் : இனி உங்கள் வீடுகளை 24 மணி நேரமும் நேரடியாகவே கண்காணிக்கும் போலீஸ்..!


திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைத்து திருச்சி மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.

No comments:

Post a Comment