தமிழகத்தை பொறுத்தவரை தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே மிக குறைவாக உள்ளது. அதை போன்று தொலைக்காட்சியை பார்க்காதவர்கள் மிகவும் சொற்பமாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெரியவர்கள் தான் தொலைக்காட்சி தொடர்களை அதிக அளவில் பார்ப்பார்கள்.
தற்போது இளைய தலைமுறையினர் அதிக அளவில் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பல முன்னணி தொலைக்காட்சிகளும், விளம்பரங்களுக்காக சீரியல்களை எடுத்து நல்ல வருமானம் சம்பாதித்து வருகிறது. இதில் பல தொலைக்காட்சி நிறுவங்கள் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொலைக்காட்சியை நிறுவனங்களுக்குள்ளேயே பல போட்டிகள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும் நிலையில், சில மணி நேர ஒலிபரப்பு நிறுத்தி வைத்தால், எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்?அப்படியான ஒரு முடிவை ஜி தமிழ் நிறுவனம் எடுத்துள்ளது. அதிக அளவில் பார்க்கப்படும் நம்பர் ஒன் சானாலாக இருக்கும் ஜீ தமிழ் நிறுவும் ஒளிபரப்பு நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு காரணம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே அன்றைய தினம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பை நிறுத்தி வைக்க ஜீ தமிழ் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment