திருப்போரூர்: சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சி வளர்ச்சி அடைந்துவந்ததாலும் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தையூர், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்கள் வழியாக பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி குட்டை போல் தேங்கி நிற்கின்றன.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. கழிவுநீர் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் கழிவுநீர் அகற்றி, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கேளம்பாக்கம் மற்றும் தையூர் ஊராட்சி நிர்வாகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை’’ என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சாத்தாங்குப்பம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘’எங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் தையூர், சாத்தங்குப்பம், கேளம்பாக்கம் பகுதிகளில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய், சாலைகள் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இப்பகுதிகளில் அரசு கூடுதல் நிதி கொடுத்து, இங்கு பாதாள சாக்கடை திட்டத்தைநிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment