வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: `கைவிட மாட்டேன்னு சொன்னாரு; இப்போ போனையே எடுக்க மாட்டேங்காரு’ - தர்மபுரி எஸ்.ஐ-யால் குமுறும் கர்ப்பிணி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 04, 2019

`கைவிட மாட்டேன்னு சொன்னாரு; இப்போ போனையே எடுக்க மாட்டேங்காரு’ - தர்மபுரி எஸ்.ஐ-யால் குமுறும் கர்ப்பிணி!




காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் கொடுத்துள்ள புகார் காக்கிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சத்யா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், ``தர்மபுரி ஸ்பெஷல் டீமில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் சீனிவாசனும் நானும் 2007-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கிருஷ்ணகிரி முருகன் கோயிலில் திருமணமும் செய்துகொண்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். 



ஆனால், சீனிவாசன் 2010-ம் ஆண்டு உமா என்ற பெண்ணுடன் ஊரறியத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அதை அறிந்து அதிர்ந்துபோய் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். என் பெற்றோர் சீனிவாசனை அழைத்து விசாரித்தனர். 



அதற்குச் சீனிவாசன் உண்மைதான், எங்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. அதனால் வேறு திருமணம் செய்துகொள்கிறேன். சத்யாவை நான் கைவிட மாட்டேன், கடைசி வரை பார்த்துக் கொள்கிறேன் என்று அப்போது உறுதி அளித்தார். 



அதேபோல என்னைக் கவனித்தும் வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் கர்ப்பமடைந்தேன். இந்தத் தகவலை ஆசையுடன் கணவர் சீனிவாசனிடம் தெரிவித்தேன். ஆனால், அப்போது முதல் சீனிவாசன், என்னை முழுவதுமாகத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு தொலைபேசியில் அழைத்தாலும் என் அழைப்பை ப்ளாக் செய்து வைத்துவிட்டார். 



நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என்னைத் தன்னந்தனியாகத் தவிக்க விட்டதால், என்னால் வீட்டு வாடகை கூடச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றேன். ஆனால் அவரோ என்னைத் துளியும் கண்டுகொள்ளவில்லை"; எனப் புகார் தெரிவித்துள்ள சத்யா... சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும், காவல்துறையில் சீனிவாசனுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.



இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம், ``சத்யா என் அத்தை மகள்தான். எனக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து குழந்தைகள் உள்ளது. சத்யாவின் நடவடிக்கை சரியில்லை, என் தாயிடம் எனது காவலர் அடையாள அட்டையை ஏமாற்றிப் பெற்றுச் சென்றுள்ளார். மற்ற ஆவணங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டது. அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை"; என்று மறுப்பு தெரிவித்தார்.
இது சம்பந்தமாகத் தர்மபுரி பி-1 இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் பேசினோம், ``சத்யா கொடுத்துள்ள புகார் தொடர்பான விசாரணைக்குச் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. 



சத்யா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளும் ஆவணங்களும் நம்பகத் தன்மையுடன் உள்ளது. இந்தப் புகாரில் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே முழு விவரம் தெரிய வரும்"; என்கின்றார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது நிறைமாத கர்ப்பிணிப் பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தருமபுரி மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment