விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூரில் 3பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை அருகே சித்தாத்தூரைச் சேர்ந்த ராஜகுமாரிக்கும், குறிப்பிடபுரத்தைச் சேர்ந்த விஜேந்திரன் என்பவருக்கும் 9ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ராஜகுமாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிக் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் ஆசனூர் – சிறுவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்திக் கலைந்துபோகச் செய்தனர்.
No comments:
Post a Comment