இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 30 ஆம் தேதி தமிழக பகுதியில் இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது கடல் காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்றும், நாளையும் வட மாநிலங்களிலும், நாளை மறுதினம் கேரளாவிலும் சூழல் காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
வரும், 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment