திருப்போரூர் அடுத்த காலவாக்கம் கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் 3ம் ஆண்டு படிக்கும் கேரளாைவ சேர்ந்த முகம்மது அப்ரிடி உள்பட மாணவர்கள் சிலர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
நேற்று காலை கல்லூரிக்கு புறப்பட்ட மாணவர்கள், வீட்டின் சாவியை உள்ளே வைத்து விட்டு வீட்டை பூட்டி சென்றனர்.மாலையில் கல்லூரியில் இருந்து திரும்பி வந்தபோது, சாவி இல்லாமல் திகைத்தனர். பின்னர், பூட்டை உடைத்து கதவை திறப்பது சிரமம் என நினைத்த அவர்கள், மொட்டை மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கி, ஜன்னல் வழியே உள்ளே செல்ல முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து, முகம்மது அப்ரிடி உடலில் கயிறு கட்டி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்து 14வது மாடியில் இருந்து முகம்மது அப்ரிடி கீழே விழுந்தார். அதில், அவரது மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment