காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் to வந்தவாசி சாலையில் உள்ளது. இப்பகுதியில் 5 வேகத்தடைகள் உள்ளன. அதிக வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களின் நிழல் காரணமாக அந்த தற்காலிக வெள்ளைபூச்சுகள் சுத்தமாக தெரியாத காரணத்தினால் வாகனங்கள் அந்த வேகத்தடைகள் மீது (Speed Break) வேகமாக ஏறி இறங்கி இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்புறமாக இடித்துக் கொண்டு காயமடைகின்றனர். ஆம்புலன்ஸ் செல்லும் போதும் உள்ளிருக்கும் நோயாளிகளும் உடன் சென்றவர்களும் கீழும் மேலும் விழுந்துகொண்டு செல்கின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு நிலையான வெள்ளை பூச்சு மற்றும் பிரதிபளிப்பான் (Refection) அமைக்கப்படுமா....? இந்த சாலையினை போட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா...? இதனை மேற்பார்வையிட்டு கையெழுத்திட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.
No comments:
Post a Comment