காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்
சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரிலுள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு
நேற்று இரவு நிறைமாத கர்ப்பிணி பொம்மி என்பவர் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
ஆனால், அப்போது மருத்துவர் பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கே பணியிலிருந்த செவிலியர்கள் பேறுகாலம் பார்த்துள்ளனர். சுக பிரசவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.
குழந்தையும் வெளியேவர ஆரம்பித்தது. ஆனால், அனுபவம் இல்லாத
செவிலியர்கள், குழந்தையின் தலையை தனியாக பிய்த்து எடுத்துவிட்டனர். இதனால்
அந்த சிசு பரிதாபமாக பலியானது. இதனிடையே பொம்மியின் உடலுக்குள்
மாட்டிக்கொண்ட, குழந்தையின் உடல்பகுதியை போராடி மீட்ட செவிலியர்கள்,
உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பொம்மியை சிகிச்சைக்கு அனுப்பி
வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார், 30 கிராம, மக்கள் வந்து செல்லும்
சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லாத நிலை
நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment