வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்திற்கு லஞ்சம் - PM Kisan Samman
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, February 19, 2019

ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்திற்கு லஞ்சம் - PM Kisan Samman



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் (PM Kisan Samman) விவசாயிகள் நலன் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அப்போது, ஒவ்வொரு ஏழை விவசாயிகளிடமும் பெறப்படும் மனுவிற்கு தலா ரூ.100/- கையூட்டாக பெறப்படுவது இந்த பக்கத்தில் உள்ள வீடியோ மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது.  


ஒரத்தி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் இந்த மனுவானது, கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் 4 நபர்களின் மூலம் பெறப்படுகிறது. 




இந்த மனுக்களை பெறும்போது கிராம நிர்வாக உதவியாளர் சிவக்குமார் என்பவரின் துணையோடு அருகில் அமர்ந்திருக்கும் பெண் கையூட்டு பெறுவது மேற்காணும் வீடியோ மூலம் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

அரசு திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பயன்பெறும் இந்த திட்டத்தில் கூட ரூ.100/- கையூட்டு என்றால், அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு கையூட்டு வாங்கப்பட்டுள்ளதோ என்பது அதிகாரிகளுக்குதான் தெரியும். ஒரு மனுவிற்கு ரூ.100/- என்றால் அந்த ஊராட்சியில் குறைந்தபட்சம் 1000 மனுக்கள் பெறப்பட்டால் கூட ரூ.1,00,000/- வசூலாகிவிடும். 

இப்படி யோசிக்கும் பட்சத்தில் எந்தெந்த ஊராட்சியில் எவ்வளவு வசூல் என்று கணக்கிடும்போது அரசின் வருமானம் இதிலிருந்தே புலப்பட்டுவிடும். ஆனால் இந்த வருமானம் அரசிற்கா அல்லது அரசு அதிகாரிகளுக்கா என்பது யாருக்கு தெரியும். அரசின் எந்த திட்டம் வந்தாலும் அதில் முக்கிய “பங்கு” அரசு அதிகாரிகளுடையது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கெல்லாம் எப்போதுதான் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


No comments:

Post a Comment