புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்து 12 லட்சம் மதிப்புள்ள நகைகளை
கொள்ளையடித்த பணத்தில் சென்னை சென்று குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட மருமகன்
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் கடந்த 2015
ஆம் ஆண்டு கொலை செய்யபட்டார். அப்போது அவரது வீட்டில் இருந்த 50 சவரன் தங்க
நகை கொள்ளை அடிக்கப்பட்டு தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து
முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக
தேடிவந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
ஆனால் இந்த கொலை வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் பகுதியில் தமிழ்செல்வி என்பவரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முத்தியால்பேட்டையை பகுதியில் வசித்துவந்ந தனது மாமியார் கலைவாணியை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|

மேலும்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் தனது நண்பர் சதிஷ்
என்பவருடன் சேர்ந்து சென்னையில் நடைபெறும் குதிரை பந்தயங்களில் ஈடுபட்டதாக
வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்திடமிருந்து கொள்ளையடிக்கபட்ட 12 லட்சம்
மதிப்பிலான 47 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவரது நண்பர் சதிஷ்
என்பவரையும் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
பணத்திற்காக மாமியரை மருமகனே கொன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment