வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடனை திரும்ப செலுத்தாததால் கொடூரம் இளம்பெண்ணை தாக்கி தரதரவென இழுத்து சென்ற மகளிர் குழுவினர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 25, 2019

கடனை திரும்ப செலுத்தாததால் கொடூரம் இளம்பெண்ணை தாக்கி தரதரவென இழுத்து சென்ற மகளிர் குழுவினர்

குப்பியில் கடனை திரும்ப செலுத்தாத இளம்பெண்ணை தாக்கி மகளிர் குழுவினர் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





துமகூரு மாவட்டம் குப்பியை சேர்ந்தவர் சவிதா(வயது 28). இவர் அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் குழுவில் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். கூலி வேலை செய்து வரும் சவிதா கடனை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் இதுவரை ரூ.10 ஆயிரம் கடனை திரும்ப செலுத்தியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிகிறது. இதுகுறித்து மகளிர் குழுவினர் அவரிடம் கேட்டுள்ளனர். அவரும் விரைவில் தருவதாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் சவிதாவை சந்தித்த மகளிர் குழுவினர் கடனை திரும்ப செலுத்தும்படி கேட்டுள்ளனர். அப்போது சவிதாவுக்கும், மகளிர் குழுவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதைதொடர்ந்து மகளிர் குழுவை சேர்ந்த சில பெண்கள் சவிதாவை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த சிலர் தடுக்க முயன்றனர். இருப்பினும் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள், சவிதாவை சரமாரியாக தாக்கியதுடன், தரதரவென இழுத்துச் சென்றனர். மேலும் கால் களால் அவரை எட்டி உதைத்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் சவிதா கதறி அழுதார்.

இதையும் பொருட்படுத்தாமல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்தது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சி சேனல்களிலும் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  

No comments:

Post a Comment