வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 02, 2019

என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்!

"என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்கல" என்று பெற்றோர் கதறிய பின்னர்தான், மாணவியின் மரணம் வெளியே தெரியவந்தது. 


ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி. 25 வயதாகிறது. இவர் சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படிப்பதால், தினமும் தன் அம்மா- அப்பாவுடன் ரஞ்சனா குமாரி பேசுவது வழக்கம். ஆனால் 2 நாளாக மகளிடமிருந்து எந்த போனும் அவர்களுக்கு வரவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


போன் எடுக்கவில்லை

நியூ இயர் வாழ்த்து சொல்லவும் மகள் கூப்பிடவில்லை. போன் செய்தாலும் மாணவி எடுக்கவில்லை. இதனால் குழப்பமும், பயமும் அடைந்த பெற்றோர், உடனடியாக ஐஐடி ஹாஸ்டல் வார்டனுக்கு போன் செய்து, தகவலை சொன்னார்கள்.


அதிர்ச்சி 

"என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல? ஏன் போன் எடுக்கல" என்று கேட்டு கதறி அழுதார்கள். இதையடுத்து, ஊழியர்கள் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.


கதவை உடைத்தனர்

இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்கள். எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.


செல்போன் ஆய்வு 

காதல் விவகாரம் ஏதாவது இருக்குமா? அல்லது வேறு ஏதாவது விஷயமா என்றும் தெரியவில்லை. "ரூமுக்கு போய் தூங்குகிறேன்" என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டுதான் அறைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு அவர் வெளியே வரவே இல்லையாம். இதனால் போலீசார் ரஞ்சனா குமாரியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment