வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 14, 2019

சிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி!



சிங்கப்பூரில் மகனை பார்க்க சென்ற தாய் ஒருவர், பிளாட்பாரத்தில் மிளகாய் வத்தலை காய வைத்து அதற்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய காட்சி மனதை உருக்குலைய வைத்துள்ளது. 

 
முன்பெல்லாம் வீட்டில் பெண்களுக்கு மிளகாய் அரைப்பது என்பதே பெரிய வேலை. இதற்காக மிளகாய், தனியா, மஞ்சள் பொருட்களை வாங்கி சுத்தப்படுத்துவர். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பிறகு அதை வெயிலில் காய வைத்து எடுத்து, அதனை வாணலியில் லேசாக வாட்டி எடுத்து, அதனுடன் சில பொருட்களையும் வாசனைக்காக வறுத்து எடுப்பார்கள். கடைசியில் அதற்கென இருக்கும் ஒவ்வொரு டப்பாக்களில் அதனை போட்டு மாவு மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து, அதனை ஒருபேப்பரில் சூடு போக காய வைத்து அதே டப்பாக்களில் 6 மாதம் தாங்குவது போல் அரைத்து எடுத்து வைத்து கொள்வர்.


யாரும் செய்வதில்லை 

இதனை தன் மகன், மகள்களுக்கு பிரித்து தரும்போது பெற்ற தாயின் மன சந்தோஷம் யாராலும் உணர முடியாது. அம்மா கொடுத்த அந்த மிளகாய்தூள் வாசனையுடன் சேர்த்து பாசமும் ஆறு மாசத்துக்கு தாங்கும். நவீன உலகில் இதை இப்போது பெரும்பாலும் செய்வதில்லை.


தூங்கி விட்டார்  

ஆனால் ஒரு தாய், சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது பிளாட்பாரத்தில் மிளகாய், மல்லி, மஞ்சள் போன்றவற்றை காயவைத்து அதற்கு பக்கத்திலேயே காவலுக்கும் உட்கார்ந்தார். உச்சி வெயில் மண்டையை பிளக்க களைப்பான அவர் பேப்பர் ஒன்றினை தரையில் விரித்து கொஞ்ச நேரத்தில் அப்படியே படுத்து தூங்கியும் விட்டார்.


விதிமுறைகள்  

இதை போட்டோ எடுத்து, தனா டெல்டாகாரன் என்பவர் தனது பேஸ்புக்கில் போட்டு தன் கருத்தையும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.


தாய் அன்பு  

பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை" என பதிவிட்டுள்ளார்.


மனது கஷ்டப்பட்டது  

அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.

No comments:

Post a Comment