சென்னையில் குடிபோதையில் போலீசில் சிக்கியதை மறைக்க காருக்கு தீ வைத்த
புத்திசாலி ஓட்டுநர் போலீசாரிடம் சிக்கினார்.
சென்னை ஜவஹர்லால் சாலையில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் அருகே தான் இந்த
சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதராசன் என்பவர் அந்த நட்சத்திர ஓட்டலில் கார்
ஓட்டுநராக பணிபுரிகிறார். குடி போதையில் காரை எடுத்து கொண்ட அவர்
போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். குடித்துவிட்டு வாகனம்
ஓட்டியதால் போலீஸார் அவருக்கு அபராதம் விதித்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
ஒரு வழியாக பணத்தை கட்டுவிட்டு வந்த அவருக்கு லேசான உதறல் ஏற்பட்டது.
போலீசாரிடம் சிக்கியது தெரிந்தால் வேலை பணால் ஆகிவிடுமே என்று பயந்து
என்ன... செய்யலாம் என்று யோசித்திருக்கிறார். ஒரு வித ஐடியாவை
கண்டுபிடித்ததாக துள்ளிக்குதித்த மதராசன், தாம் பணியாற்றும் ஓட்டல் அருகே
நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்.
காரைக் கொளுத்திவிட்டு, பின்னர் தீ விபத்து ஏற்பட்டது என்று வேலை
பார்க்கும் ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிடலாம் என்று கணக்கு
போட்டுள்ளார். எஸ்கேப் ஆகலாம் என நினைத்துள்ளார். தகவலறிந்து தீயை விரைவில்
வந்து தண்ணிர் ஊற்றி அணைத்த போலீஸார் விசாரணை நடத்தினர். மதராசனின்
தகிடுதத்தம் தெரிய.. போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னை:சென்னையில் குடிபோதையில் போலீசில் சிக்கியதை மறைக்க காருக்கு தீ
வைத்த புத்திசாலி ஓட்டுநர் போலீசாரிடம் சிக்கினார்.
சென்னை ஜவஹர்லால் சாலையில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் அருகே தான் இந்த
சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதராசன் என்பவர் அந்த நட்சத்திர ஓட்டலில் கார்
ஓட்டுநராக பணிபுரிகிறார். குடி போதையில் காரை எடுத்து கொண்ட அவர்
போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
குடித்துவிட்டு வாகனம்
ஓட்டியதால் போலீஸார் அவருக்கு அபராதம் விதித்தனர்.
ஒரு வழியாக பணத்தை கட்டுவிட்டு வந்த அவருக்கு லேசான உதறல் ஏற்பட்டது.
போலீசாரிடம் சிக்கியது தெரிந்தால் வேலை பணால் ஆகிவிடுமே என்று பயந்து
என்ன... செய்யலாம் என்று யோசித்திருக்கிறார். ஒரு வித ஐடியாவை
கண்டுபிடித்ததாக துள்ளிக்குதித்த மதராசன், தாம் பணியாற்றும் ஓட்டல் அருகே
நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்.
காரைக் கொளுத்திவிட்டு, பின்னர் தீ விபத்து ஏற்பட்டது என்று வேலை
பார்க்கும் ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிடலாம் என்று கணக்கு
போட்டுள்ளார். எஸ்கேப் ஆகலாம் என நினைத்துள்ளார். தகவலறிந்து தீயை விரைவில்
வந்து தண்ணிர் ஊற்றி அணைத்த போலீஸார் விசாரணை நடத்தினர். மதராசனின்
தகிடுதத்தம் தெரிய.. போலீசார் அவரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment