வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 14, 2019

நல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்

"2 கிலோ கறி போடுடா" என்று வயதான மட்டன்கடைக்காரரை போலீஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம்தான் விவகாரமாக வெடித்து கிளம்பியது. சேலம் கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர். 75 வயதாகிறது.


இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே மட்டன் கடை வைத்திருக்கிறார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகிய 2 பேரும் இந்த கடையில்தான் எப்பவுமே ஓசியில் மட்டன் வாங்கி போவதுதான் வழக்கம். ஒருநாளும் இவர்கள் வாங்கிய கறிக்கு காசு தந்ததே கிடையாது.


மட்டன் போடுடா 

இந்நிலையில் நேற்று கறி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தநேரம் பார்த்து ரெண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 3 பேரும் ஜீப்பில் வந்து கடைக்கு வந்தனர். அப்போது, ஜீப்பில் உட்கார்ந்துகொண்டே, "2 கிலோ கொழுப்பா மட்டன் போடுடா" என்று சத்தமாக கேட்டனர். என கறிக்கடைக்காரரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், அதிகாரமாக கேட்டதாக கூறப்படுகிறது.


கெட்ட வார்த்தைகள் 

அதற்கு மூக்குத்தி கவுண்டர், "நான் உங்களை விட வயசில் பெரியவன். கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்" என்றார். இதைக் கேட்டதும் கோபமடைந்த 3 போலீஸ்காரர்களும், ஜீப்பை விட்டு கீழே இறங்கி வந்து, மூக்குத்திக்கவுண்டர், அவருக்கு உதவியாக கடையில் நின்றிருந்த அவருடைய மனைவி ராமாயியை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்கள்.


ஏன் அடிச்சீங்க?  

பிறகு மூக்குத்தி கவுண்டரை ஆத்திரம் தீராமல், அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றி வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்றதாக தெரிகிறது. விஷயம் கேள்விப்பட்ட மூக்குத்தி கவுண்டர் மகன் விஜயகுமார் ஸ்டேஷன் சென்று, "எதுக்காக என் அப்பாவை அடிச்சீங்க?" என்று கேட்டார். இதை கேட்ட அங்கிருந்த போலீஸ்காரர் விஜயகுமாரையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.


ரத்த காயங்கள் 

கடைசியாக ஒரு வெள்ளை பேப்பரில் தந்தை-மகன் இருவரிடமும் போலீசார் கைரேகை வாங்கி கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். போலீசார் அடித்த அடியில் உடம்பெல்லாம் ரத்த காயமடைந்த தந்தையும், மகனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து, கமி‌ஷனர் சங்கரே இது சம்பந்தமாக விசாரணை நடத்த போவதாக கூறப்பட்டது.


கமிஷனர் சங்கர்  

ஆனாலும், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் இருவரையும் சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கமி‌ஷனர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment