வாய்க்கால் கரைக்கு மாணவியை தூக்கி கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்ற பால்ராஜூக்கு 4 வருஷம் தண்டனை கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு வயது 42.
(தொடர்ச்சி கீழே...)
கடந்த 2017, ஜூலை மாதம், பள்ளி மாணவி ஒருவரை வாய்க்கால் கரைக்கு தூக்கி சென்று விட்டார். அங்கு அப்பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றார். ஆனால் பள்ளி மாணவியோ இந்த காமுகனிடம் போராடியதுடன், பால்ராஜின் கைவிரலை கடித்து துப்பி விட்டார். இதில் ரத்தம் கொட்ட ஆரம்பித்ததும், வலியால் துடித்தார் பால்ராஜ்.

இந்த சமயத்தில் மாணவி அங்கிருந்து தப்பி ஓடிவந்து
பெற்றோரிடம் நடந்ததை சொன்னார்.
இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக தா.பேட்டை போலீசில் புகார்
செய்தனர். புகாரின் அடிப்படையில் பால்ராஜ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
இது சம்பந்தமான வழக்கும் திருச்சி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
போலீசார் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடப்பட்டு வந்தது.
கடைசியில் நேற்று எல்லா சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு
சொல்லப்பட்டது. மாணவியை சீரழிக்க செய்ய முயன்ற பால்ராஜுக்கு 4 வருஷம்
கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால்
மேலும் ஒரு வருஷம் சிறை தண்டனை என்றும் நீதிபதி ஜி.மகிழேந்தி தீர்ப்பு
கூறினார்.
No comments:
Post a Comment