அனல்மின் நிறுவனத்தில் ‘கேட்’ தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கான
பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 207 பேர் தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : எலக்ட்ரிக்கல் - 47, மெக்கானிக்கல் - 95, எலக்ட்ரானிக்ஸ் - 25, இன்ஸ்ட்ருமென்டேசன் - 25, மைனிங் - 15.
தேசிய அனல்மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என
அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ்
டிரெயினி-2019 பணியிடங்களை கேட் 2019 தேர்வின் அடிப்படையில் நிரப்ப
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : எலக்ட்ரிக்கல் - 47, மெக்கானிக்கல் - 95, எலக்ட்ரானிக்ஸ் - 25, இன்ஸ்ட்ருமென்டேசன் - 25, மைனிங் - 15.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள்
31-1-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு
அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
எலக்ட்ரிக்கல்,
மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், புரொடக்சன்,
தெர்மல், மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன், பவர் என்ஜினீயரிங்,
இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ்,
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், மைன் என்ஜினீயரிங் உள்ளிட்ட
பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019 தேர்வு
எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
கேட்
தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு
அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு
தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ந் தேதியாகும்.
No comments:
Post a Comment