வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெளியான அதிர்ச்சி தகவல்.. 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 03, 2019

வெளியான அதிர்ச்சி தகவல்.. 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்

ரூ.2000 நோட்டுக்களை பிரிண்ட் செய்வதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு அறிவித்த பிறகு, 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

பண மதிப்பிழப்பால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டது. 2018ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில் 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள்.


ஐடியாவே தப்பு

1000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டு 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, பண பதுக்கலுக்கும், கருப்பு பண வர்த்தகத்துக்கும் மேலும் உதவி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதை உறுதி செய்வதை போல கடந்த ஏப்ரல் மாதம், நாடு முழுக்க முக்கிய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.


2000 நோட்டு பதுக்க எளிதானது  

மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருந்ததையடுத்து பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிலும், 2000 ரூபாய் நோட்டுக்களை எளிதாக பதுக்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக, வருமான வரித்துறை இக்காலகட்டத்தில் நடத்திய ரெய்டுகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் கட்டுக்கட்டாக சிக்கின.


2000 ரூபாய் நோட்டு நிறுத்தம்  

இந்த நிலையில்தான், 2000 ரூபாய் நோட்டுக்கள் பிரிண்ட் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகும் என்று கூற முடியாது என்றபோதிலும், மெதுவாக இவை புழக்கத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிடும் வாய்ப்புள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.


படிப்படியாக குறைக்கப்பட்டது 

ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில், 2017-18ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்படும் எண்ணிக்கை குறைந்துவிட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் மொத்த பண மதிப்பில் 7.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அதேநேரம், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது அதிகரித்துள்ளதாம். 2017ம் ஆண்டு மார்ச் மாதம், 22.5% என்ற அளவில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் பங்களிப்பு, கடந்த வருடம் மார்ச் மாதம் 42.9 சதவீதமாக உயர்ந்தது.

No comments:

Post a Comment