அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும்
என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்
தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டசபை கூட்டத்
தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
(தொடர்ச்சி கீழே...)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
எளிமையான வாழ்க்கை வாழுங்கள், அது ஊழலை அகற்றிவிடும். அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். திருவாரூர்
மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும்.
திருவாரூரில் தேர்தல் நடைபெறுவதால் அந்த மாவட்டத்தில் பரிசு திட்டம் இல்லை.
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற பரிசு பொருட்கள் இதுவரை
வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக
இருக்கும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார
பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான
நகரமாக கோவை விளங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment