எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
செண்டிவாக்கத்தில் கலக்கல் கலெக்ஷன் - காவல்துறையினரைக் கண்டு பீதியில் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதிகளில் காவல் துறையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.
தினமும் காலை 10 மணியளவில் ஆஜராகும் போலீசார் மாலை 6 மணியளவில் தான் திரும்புகின்றனர். பொதுமக்களைப் பொறுத்தவரை மேல்மருவத்தூர் காவல்நிலைய கிளை என்பது செண்டிவாக்கம் தான் என்று தோன்றும் அளவிற்கு அவர்களின் நேர செலவிடல் இங்குதான் உள்ளது. சில சமயங்களில் காலை இருவேறு போலீசாரும் மதிய உணவிற்கு பிறகு இருவேறு போலீசாரும் என சுழற்சி முறையில் கலெக்ஷன் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதியில் வேகத்தடை (Speed Breaker) உள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் போலீசார்.
ரூ.500/-ல் அபராதம் வசூலிக்க ஆரம்பிக்கும் இவர்கள் அந்த நபர் (வாகன ஓட்டிகள்) ரூ.50/- தான் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு வரும் வரை பொறுத்து கைக்கு கிடைத்ததை வாங்கிக் கொள்கின்றனர் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.
இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள் வேறு வழியில் செல்லும் எண்ணம் மேலோங்குகிறது. காரணம் என்னவெனில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பினும் குறைந்தபட்ச தொகையாவது கொடுத்தால் தான் விடுவிக்கிறார்கள் என்பதே.
மேலும் பலதரப்பினர் பல்வேறு அவசர காரியங்களுக்கு செல்லும் போதும், பணிக்காக செல்லும் போதும் பொதுமக்களின் நேரத்தை வீணடிக்கின்றனர். தற்போது பொதுமக்களின் கேள்வி என்னவென்றால் மேல்மருவத்தூர் காவல் துறையினரின் போலீஸ் பூத் பகுதி இதுதானா..? அல்லது கிளை காவல்நியைம் இதுதானா என்பதே..?
தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி சீசன் என்பதால் கூடுதல் போலீசார் ஆட்டோக்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுமக்களை கட்டுப்படுத்துகிறார்களோ இல்லையோ..! தவறாமல் வாகன ஓட்டிகளிடம் கலக்கல் கலெக்ஷனில் ஈடுபடுகின்றனர். மேலும் எவ்வளவோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என தோன்றும் அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் உள்ளது. மேலும், இவர்களால் நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் அவப்பேர் தான் ஏற்படும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.
இந்த அவல நிலையால் பல்வேறு சமூக ஆதங்கங்களுடன் காவல் துறையில் புதியதாக பணியில் சேரும் காவலர்களுக்கும் கலெக்ஷன் பயிற்சி அளிக்கப்படுவதால் பிற்காலத்தில் இவர்களும் நச்சுவாக மாற வாய்ப்புள்ளது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்தபோதும் வாகன ஓட்டிகளின் குறைகளை கண்டறிய காவல் துறையின் இப்படிப்பட்ட சோதனைகள் தேவையற்றதே. எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தரப்பில் முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.
No comments:
Post a Comment