வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மீண்டும் துயரம்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 05, 2018

மீண்டும் துயரம்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி..



கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (30) - கோமதி (26) தம்பதியர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.

கடந்த 2- ந்தேதி நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, கோமதிக்கு குழந்தை இறந்து பிறந்தது. பின்னர், குழந்தையை, வீட்டின் அருகே உறவினர்கள் புதைத்தனர். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் நடந்ததால் கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கோமதியை, சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
ஆனால் அங்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் அளிக்கபட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், கோமதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
போதிய மருத்துவ வசதியின்றியோ, மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் துணையின்றியோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதே போல், திரைப்படங்கள் பார்த்து அதன் உத்வேகத்தினாலோ, யூடியூப் பார்த்தோ வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சிப்பதும், தாய் மற்றும் சேய்க்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகளை தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment