எச்.ராஜாவின் உருவ பொம்மையை கெட்டியாக பிடித்துகொண்டு நடுரோட்டில்
போலீசார் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும்
விதமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேசியதாக கூறி அக்கட்சியினர் பல்வேறு
வகையில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
தலித் அல்லாத சமூகத்தினரை காயப்படுத்தும் வகையில் எச்.ராஜா பேசியிருப்பது
மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி அவருக்கு எதிரான போராட்டங்களையும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். (தொடர்ச்சி கீழே...)
சமூக பதற்றம்
அதன்படி இன்று திருச்சியிலும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகப்பதற்றத்தை
உருவாக்கியுள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராசாவை கண்டித்தும், அவர் மீது
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை
வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
எச்.ராஜா உருவ பொம்மை
மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திரண்ட அக்கட்சியினர்
எச்.ராஜாக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் திடீரென சாலை
மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கையில் எச்.ராஜா உருவபொம்மை
இருந்தனர்.
தள்ளுமுள்ளு
அதனை எரிக்க முயன்றபோது, அதற்குள் போலீசார் விரைந்து வந்துவிட்டனர்.
எச்.ராஜாவின் உருவ பொம்மையை போலீசார் பறிக்க முயன்றபோது,
போராட்டக்காரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெரும் பரபரப்பு
இதையடுத்து, போலீசார் உருவபொம்மையை பறித்ததுடன், அதை எடுத்து கொண்டு
நடுரோட்டில் ஓடினார்கள். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போலீசாரை
துரத்த ஆரம்பித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்தனர்
எப்படியோ, கடைசியில் எச்.ராஜா உருவபொம்மையை போலீசார் காப்பாற்றியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார். பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந...
-
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், ...
-
வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறுத்துப் போன நபர் ஒருவர், மின்சார ஒயர்களின் மீது ஏ...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது காஞ்சிப...
-
புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறி...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப...
-
ஒரு தலை காதலால் மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் மற்றும்இதற்குஉடந்தையாக இருந்த மதகுரு உள்பட 5 பேரையும் போலீசார் கை...
No comments:
Post a Comment