கூந்தல் முடி நீளமாக வளர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்களின் விருப்பமாக
இருக்கும். நீண்ட கூந்தல் முடியை பெறுவதற்கு மெனக்கெடுவார்கள்.
கூந்தல் அலங்காரத்திற்கு கூடுதல்
முக்கியத்துவமும் கொடுப்பார்கள். குஜராத்தை சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக 5 அடி 7 அங்குலத்தில் கூந்தல் முடி வளர்த்து இருக்கிறார். அவரது கூந்தலின் நீளம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது. 16 வயதாகும் அவருடைய பெயர் நிலான்ஷி பட்டேல். சிறுவயதில் தனக்கு தவறாக சிகை அலங்காரம் செய்யப்பட்டதே தான் நீளமாக முடி வளர்த்ததற்கு காரணம் என்கிறார்.
கூந்தல் முடி
நீளமாக வளர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்களின் விருப்பமாக இருக்கும்.
நீண்ட கூந்தல் முடியை பெறுவதற்கு மெனக்கெடுவார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
கூந்தல் அலங்காரத்திற்கு கூடுதல்
முக்கியத்துவமும் கொடுப்பார்கள். குஜராத்தை சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக 5 அடி 7 அங்குலத்தில் கூந்தல் முடி வளர்த்து இருக்கிறார். அவரது கூந்தலின் நீளம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது. 16 வயதாகும் அவருடைய பெயர் நிலான்ஷி பட்டேல். சிறுவயதில் தனக்கு தவறாக சிகை அலங்காரம் செய்யப்பட்டதே தான் நீளமாக முடி வளர்த்ததற்கு காரணம் என்கிறார்.
‘‘6 வயதில் முடி வெட்ட சென்றிருந்தபோது அசிங்கமாக
‘ேஹர் கட்டிங்’ செய்து விட்டார்கள். அதை பார்த்து மன வேதனை அடைந்தேன். இனி
ஒருபோதும் முடியே வெட்டக்கூடாது என்று முடிவெடுத்தேன். அன்று முதல் முடியை
வெட்டாமல் வளர்த்தது இன்று கின்னஸ் சாதனை படைக்க காரணமாக அமைந்துவிட்டது’’
என்கிறார்.
நிலான்ஷியை அவரது தோழிகள் ரபுன்ஷல்
என்ற கார்ட்டூன் கதையில் வரும் சிறுமியின் கதாபாத்திரத்தின் பெயரிலேயே
அழைக்கிறார்கள். ரபுன்ஷல் கதாபாத்திர சிறுமிக்கு இருப்பதுபோல்
நிலான்ஷிக்கும் நீண்ட கூந்தல் இருப்பதாக கூறுகிறார்கள். நீண்ட கூந்தலை
பராமரிப்பதில் தனக்கு எந்தவிதமான அசவுகரியமும் இல்லை என்கிறார், நிலான்ஷி.
‘‘நீண்ட
கூந்தல் முடியால் நான் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதாக பலரும்
நினைக்கிறார்கள். ஆனால் எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை.
வாரம் ஒருமுறை தலை முடியை தண்ணீரில் அலசுகிறேன். எனது அம்மா சிகை அலங்காரம்
செய்வதற்கு உதவி செய்கிறார். நீண்ட தலைமுடி எனக்கு தனி ஸ்டைலை ஏற்படுத்தி
கொடுத்திருக்கிறது. டேபிள் டென்னிஸ் விளையாடும்போது எனக்கு வசதியாக கூந்தலை
பின்னிக்கொள்கிறேன். எந்த அசவுகரியமும் எனக்கு ஏற்படுவதில்லை’’ என்கிறார்.
No comments:
Post a Comment