இங்கிலாந்தில் மனைவியைக் கொன்றதாக இந்தியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் மிடில்ஸ்பர்கில் வசித்து வந்தவர் ஜெசிகா படேல். கடந்த மே
மாதம் அவர் தமது இல்லத்தில் இருக்கும் போது மர்மமான முறையில் சடலமாக
கண்டெடுக்கப்பட்டார்.
உடல் முழுக்க காயங்கள் இருந்ததால் விசாரணையை
அந்நாட்டு போலீசார் துரிதப்படுத்தினர்.
விசாரணையின் போது, போலீசாரின் சந்தேக வளையம் கணவர் மிதேஷ் படேல் மீது
விழுந்தது. ஆனால், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுக்க
விசாரணையை வேறு கோணத்தில் போலீசார் கொண்டு சென்றனர். (தொடர்ச்சி கீழே...)
சிக்கிய ஆதாரங்கள்
துரிதமான விசாரணையில், வகையாக மாட்டிக் கொண்டார் மிதேஷ். நீதிமன்றத்தில்
அவர் எப்படி கொலை செய்தார் என்பது விவரிக்கப்பட... க்ரைம் கதைகளை மிஞ்சும்
அளவுக்கு இருந்தது மிதேஷின் ப்ளான்.
காட்டிக் கொடுத்த சாட்டிங்
தமக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு ஆண் நண்பருடன் இயற்கைக்கு மாறான உறவு
இருந்ததை அவர் விவரித்துள்ளார். ஆண் நண்பரான அந்த மருத்துவருக்கு மிதேஷ்
அனுப்பிய சாட்டிங்குகள் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக இருந்தன.
கொல்ல வேண்டும்
மனைவிக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது கதையை முடிப்பேன்
என்று அவர் நண்பருக்கு அனுப்பிய செய்தி முக்கிய ஆதாரமாக போலீசார்
சமர்ப்பித்துள்ளனர். அது தவிர, இணையத்தில் மனைவியை கொல்வது எப்படி, மனைவியை
தாம் கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தேடியதும் மிதேஷ்க்கு
பாதகமாக முடிந்தது.
வலுவான ஆதாரங்கள்
ஆனால், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மறுப்பது போல அவரும்
மறுத்துள்ளார். இல்லம் திரும்பிய போது, மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு
தமது மனைவியின் கைகளை கட்டிச் சென்றதாக மிதேஷ் தெரிவிக்க, அதை
முறியடிக்கும் விதமாக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டன.
இன்சூரன்ஸுக்கும் குறி
ஆண் நண்பருடன் வாழவும், மனைவியின் காப்பிடு பணத்தை பெறவும் மிதேஷ்
செயல்பட்டுள்ளார். அதற்காக. இன்சுலின் மருந்தை ஊசியால் செலுத்தி, பின்னர்
ஜெசிகாவின் முகத்தை பாலிதின் பையால் போர்த்தி கொன்றுள்ளார். விசாரணையில்
அனைத்து ப்ளான்களும் வெட்ட வெளிச்சமாகி விட, வகையாக மாட்டிக் கொண்டார்.
குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் தண்டனையை தர தயாராகி வருகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
-
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
No comments:
Post a Comment