வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அஜித் ரசிகர்கள் மீது தடியடி.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 01, 2018

அஜித் ரசிகர்கள் மீது தடியடி.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு!



சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் முண்டியடித்து சென்றதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பின் நடிகர் அஜித், நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முற்பட்டபோது, அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்தனர். தன்னை நோக்கி ரசிகர்கள் வருவதை கவனித்த அஜித், வேகமாக சென்று காரில் ஏற முயன்றார்.


ரசிகர்கள் கூட்டம்:  
ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரால் காரில் ஏற முடியவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். ஆனால் அதற்குள் அஜித் விமான நிலையத்தில் உள்ள செய்தி, அங்கு தீயாய் பரவியது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மத்திய தொழிற்படை போலீஸ்: 
இதனால் ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் என பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து, அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் தடுத்து நிறுத்தினர். கூடிய கூட்டத்தையும் அப்புறப்படுத்தினார்கள்.


தடியடி: 
பின்னர் விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பாதுகாப்பாக அஜித் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.

வைரல்: 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜித் தனது குடும்பத்துடன் கோவா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோதும், சரி திரும்பி வந்தபோதும் சரி, இதேபோல் அவரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். சிலருடன் அஜித்தும் செல்பி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment