"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..." என்னா ஆட்டம்??? இறந்த நாள், பிறந்த
நாள் வித்தியாசம் கூடவா சில அதிமுகவினருக்கு தெரியாமல் போய்விட்டது?
நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்
கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்காக ஏராளமான அதிமுகவினர் தமிழகம் முழுவதும்
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்படித்தான் ஒரு கிராமத்திலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இணையத்தில் ஒரு வீடியோவும் வைரலாகி
வருகிறது. எந்த ஊர் என தெரியவில்லை. (தொடர்ச்சி கீழே...)
எம்ஜிஆர்-ஜெயலலிதா
ஆனால் அங்கு அதிமுக கொடிகள் ஆங்காங்கே பறக்கிறது. நடுத்தெருவில் 30 வயது
மதிக்கத்தக்க ஒரு பெண் வெள்ளை சேலை அணிந்து டான்ஸ் ஆடுகிறார். அவரது
சேலையில் அதிமுக பேட்ஜ் குத்தப்பட்டுள்ளது. "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து"
என்ற எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடி பாடல் ஒலிக்க, இந்த பெண் டான்ஸ் ஆட
ஆரம்பிக்கிறார்.
சிரித்தபடி டான்ஸ்
தனியாக ஆடுகிறார் என்று பார்த்தால், அடுத்த சில வினாடிகளில் ஜோடி ஒருவர்
இணைகிறார். அவரும் அதிமுக கரை வேட்டி கட்டியுள்ளார். அவருக்கு எப்படியும்
வயது 45-க்கு மேலதான் இருக்கும். ரெண்டு பேரும் தெருவில் டூயட் ஆட, இதை
அங்கிருந்தோர் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள். ஆடுபவர்களும் ஏதோ
கல்யாணம், கச்சேரியில் ஆடுவதை போல பல்லை இளித்து கொண்டு
சிரித்தமேனிக்குதான் பின்னிப் பிணைந்து ஆடினார்கள்.
கை தட்டுகிறார்கள்
ஒரு நினைவு நாளை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று கூட இவர்களுக்கு
தெரியாதா? இவர்களுக்குதான் தெரியவில்லை என்றால் சுற்றி நின்று ரசித்து
பார்ப்பவர்களுக்கும் தெரியாதது அதிர்ச்சியாக உளள்து. சிலர்
கைதட்டுகிறார்கள், சிலர் விசிலடிக்கிறார்கள்.
இதுவா அஞ்சலி?
அதிமுகவில் இல்லாதவர்கள் கூட ஜெயலலிதாவுக்கான மரியாதையை ஒழுங்காக
செலுத்தினார்கள். ஆனால் இப்படி டூயட் பாட்டை போட்டு கூத்தடித்து அஞ்சலி
செலுத்தியது இணையத்தில் வீடியோவாக பரவி அனைவருக்குமே ஷாக்கை கொடுத்துள்ளது.
கரை வேட்டி - சேலை
மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு இதைவிட ஒரு களங்கத்தை யாராலும் ஏற்படுத்த
முடியாது. இது எந்த ஊரோ, எந்த கிராமமாக இருந்தாலும் சரி, அத்தொகுதி
எம்எல்ஏவோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுபோன்ற செயலை கண்டிப்பது உடனடி
அவசியமாகும். நினைவு தினத்தில் முறையான அஞ்சலியை செலுத்த தெரியாத
அதிமுகவினருக்கு கரை வேட்டி, சேலை ரொம்ப அவசியம்தானா?
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
-
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
No comments:
Post a Comment