"பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா?" என்று டிக்
டாக் ஆப்பில் ஒரே ஆட்டம், பாட்டம் என கலக்கி வருகிறார்கள்.
நரிக்குறவர்கள்!!
கொஞ்ச நாளாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
இதனை பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் இஷ்டத்துக்கு ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகமாகி கொண்டே போய், இப்போது நரிக்குறவர்கள் வரை சென்றுவிட்டது.
தனித்தே வாழ்வார்கள்
பொதுவாக எப்பவுமே எதைபற்றியும் பெரிசா அலட்டி கொள்ளாதவர்கள் நரிக்குறவர்கள். மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும், இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்படுவதாலும் நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர்.
டிக்-டாக் வீடியோ
ஆனால் இப்போது டிக்டாக் ஆப்பில் கலந்து வருகின்றனர். என்னா ஒரு டான்ஸ், என்னா ஒரு லிப் மூவ்மெண்ட், காலேஜ் பெண்கள் கெட்டார்கள்!! நடைபாதை, நடுரோடு என்று எதையுமே இவர்கள் எப்பவுமே பார்க்க மாட்டார்கள். டிக்-டாக் வீடியோக்களிலும் அப்படித்தான்.
ஆடல், பாடல்
நடுரோட்டில் நின்று கொண்டு சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடினாலும், இன்றைய நாளுக்கு அப்டேட்டாக இருக்கிறார்கள். சமீபத்தில் வந்த சினிமா பாட்டுக்குகூட அவர்கள் வாயசைத்து நடிக்கிறார்கள். இதுபோல பல வீடியோக்கள் அவர்கள் பாடி, ஆடி பதிவிட்டு வருகின்றனர்.
டிசம்பர் பூக்கள்
அதிலும் ஒரு நரிக்குறவ பெண் "திருமண மலர்கள் தருவாயா, தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே" என்று பாடி தலையில் வைத்துள்ள டிசம்பர் பூவை திருப்பி காட்டுவதே கொள்ளை அழகுதான்.
கறுப்பு மணிகள்
ஆனால் என்னதான் நியூ சாங்ஸ், டிக்-டாக் ஆப் என்று நவீனத்துக்குள் புகுந்தாலும், தங்கள் பாரம்பரிய டிரஸ்ஸிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை. பெரிய பொட்டு, மூக்கின் ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மூக்குத்தி, கறுப்பு மணிகள், அழுக்கு தாவணிகளுடன்தான் வீடியோக்களில் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
நடுரோட்டில் டான்ஸ்
எந்தவித மேக்கப்பும் இல்லாமல், கறுத்த மேனிகளுடன், நடுரோட்டில் இவர்கள் எந்த கவலையும் இல்லாமல் ஆடுவதும், பாடுவதும் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
No comments:
Post a Comment